கொரோனா பாதிப்பு: கர்நாடகாவில் 18 பேர் பலி


கொரோனா பாதிப்பு: கர்நாடகாவில்  18 பேர் பலி
x
தினத்தந்தி 20 Feb 2022 9:24 PM IST (Updated: 20 Feb 2022 9:24 PM IST)
t-max-icont-min-icon

நாடு முழுவதும் கொரோனா வைரசின் 3-வது அலை உச்சம் பெற்று குறையத்தொடங்கியுள்ளது.

பெங்களூரு,

நாடு முழுவதும் கொரோனா வைரசின் 3-வது அலை உச்சம் பெற்று குறையத்தொடங்கியுள்ளது. அந்த வகையில்,கர்நடாகவிலும் தொற்று பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் கர்நாடகாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,001- ஆக பதிவாகியுள்ளது.

 தொற்று பாதிப்பால் மேலும்  18 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்று பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 39,795- ஆக உயர்ந்துள்ளது. இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 39 லட்சத்து 36 ஆயிரத்து 586- ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனா பாதிப்பில் இருந்து மேலும்  1,780- பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 38 லட்சத்து 84 ஆயிரத்து 120- ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 12, 634- ஆக நீடிக்கிறது. பெங்களூரு புறநகர் மாவட்டத்தில் 485- பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 12 பேர் உயிரிழந்துள்ளனர். 

Next Story