உத்தரபிரதேச தேர்தலில் ஓட்டு போட்டவாறே ‘செல்பி’ எடுத்த பெண் மேயர் மீது வழக்கு
உத்தரபிரதேச தேர்தலில் ஓட்டு போட்டவாறே ‘செல்பி’ எடுத்த பெண் மேயர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கான்பூர்,
உத்தரபிரதேசத்தில் நேற்று 3-வது கட்ட சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் கான்பூர் நகர பா.ஜனதா மேயர் பிரமிளா பாண்டே, அங்குள்ள ஹட்சன் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.
அப்போது அவர் ஓட்டு போட்டவாறே செல்பி புகைப்படம் எடுத்தார். அத்துடன் வீடியோவாகவும் பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். இது வைரலாக பரவி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
வாக்குச்சாவடிக்குள் செல்போன் பயன்படுத்துவதை தேர்தல் கமிஷன் தடை செய்திருக்கும் நிலையில், கான்பூர் மேயரின் இந்த செயல் அங்கு பெரும் சலசலப்பை உருவாக்கியுள்ளது. இதைத்தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இதைப்போல, மற்றொரு வாக்குச்சாவடியில் ஒட்டுபோட்ட பா.ஜனதா நிர்வாகியும், கான்பூர் நகர யுவ மோர்ச்சா முன்னாள் தலைவருமான நவாப் சிங்கும் வாக்குச்சாவடிக்குள் செல்பி புகைப்படம் எடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story