ஹிஜாப் விவகாரம்; கர்நாடக மாவட்டங்களில் போலீஸ் பாதுகாப்பு தீவிரம்


ஹிஜாப் விவகாரம்; கர்நாடக மாவட்டங்களில் போலீஸ் பாதுகாப்பு தீவிரம்
x
தினத்தந்தி 21 Feb 2022 1:06 AM IST (Updated: 21 Feb 2022 1:06 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடத்தின் பதற்றமான மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் போலீசார் பாதுகாப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் தொடர்ந்து 6 நாட்கள் ஹிஜாப்பிற்கு அனுமதி கோரி முஸ்லிம் மாணவிகள் போராட்டம் நடத்தி வந்தனர். நேற்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால் அனைத்து கல்வி நிலையங்களின் வளாகமும் வெறிச்சோடி காணப்பட்டது. இருப்பினும் ஹிஜாப் விவகாரம் தொடர்பான சர்ச்சைகள் முழுமையாக இன்னும் நீங்கவில்லை.

இதற்கிடையில் ஹிஜாப் விவகாரத்தால் பிரச்சினைகள் தலைதூக்காமல் இருக்க கர்நாடகத்தில் உள்ள உடுப்பி, தட்சிண கன்னடா, சிவமொக்கா, தாவணகெரே உள்ளிட்ட பதற்றமான மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் போலீசார் பாதுகாப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். அதே சமயம் இன்று மீண்டும் மாணவ-மாணவிகள் பள்ளி, கல்லூரிக்கு வர இருப்பதால், வகுப்புகளை மீண்டும் தொடங்க கல்லூரி நிர்வாகங்கள் தயாராகி வருகின்றன.

Next Story