ஹிஜாப் விவகாரத்திற்கு மத்தியில் கர்நாடகத்தில் பி.யூ.சி. 2-ம் ஆண்டு செய்முறை தேர்வு இன்று தொடக்கம்


ஹிஜாப் விவகாரத்திற்கு மத்தியில் கர்நாடகத்தில் பி.யூ.சி. 2-ம் ஆண்டு செய்முறை தேர்வு இன்று தொடக்கம்
x
தினத்தந்தி 21 Feb 2022 3:42 AM IST (Updated: 21 Feb 2022 3:42 AM IST)
t-max-icont-min-icon

ஹிஜாப் விவகாரத்தில் தேர்வு எழுதவில்லை எனில், மறுதேர்வு எழுத அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் ஹிஜாப் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஹிஜாப் அணிந்து பள்ளி, கல்லூரிகளுக்கு வருவதற்கு கர்நாடக ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. அப்படி இருந்தும் ஹிஜாப் அணிந்து வரும் மாணவிகள் பள்ளி, கல்லூரிகள் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஹிஜாப் விவகாரத்திற்கு மத்தியில் கர்நாடகத்தில் பத்தாம் வகுப்பும், பி.யூ.சி. 2-ம் ஆண்டுக்கும் திருப்புதல் தேர்வு தொடங்கி உள்ளது.

இந்த நிலையில், பி.யூ.சி. 2-ம் ஆண்டுக்கான மாணவ, மாணவிகளுக்கு செய்முறை தேர்வு இன்று (திங்கட்கிழமை) முதல் தொடங்கி நடைபெற உள்ளது. ஒரு சில மாவட்டங்களில் இந்த செய்முறை தேர்வு தொடங்கப்பட்டுள்ளது. ஆனாலும் பல மாவட்டங்களில் இன்று முதல் தொடங்க இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கல்வித்துறை அதிகாரிகள் எடுத்து வருகிறார்கள்.

இதற்கிடையில், ஹிஜாப் விவகாரத்தில் செய்முறை மற்றும் திருப்புதல் தேர்வுகளை எழுதவில்லை என்றால், அவர்கள் மறுதேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது ஹிஜாப் விவகாரத்தில் மாணவிகள் கல்லூரிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டு தேர்வு எழுதவில்லை எனில், மீண்டும் அவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவதில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கர்நாடக ஐகோர்ட்டு ஹிஜாப் அணிந்து வருவதற்கு இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவு பள்ளி, கல்லூரிகளில் பின்பற்றப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் மாணவ, மாணவிகள் தவறால் தேர்வு எழுதும்படி அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

Next Story