கோவாவில் பள்ளிகள் மீண்டும் திறப்பு; உற்சாகமாக வந்த மாணவர்கள்..!
கோவாவில் கொரோனா பாதிப்பால் மூடப்பட்ட பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டன.
பனாஜி,
கோவாவில் கொரோனா பாதிப்பால் மூடப்பட்ட பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டன. அங்கு 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று முதல் வகுப்புகள் வழக்கம் போல மீண்டும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இன்றிலிருந்து (பிப்ரவரி 21) தொடக்கப் பள்ளிகள் உட்பட அனைத்துப் பள்ளிகளையும் திறக்க கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து கோவா பள்ளிக்கல்வி இயக்குனர் பூஷன் சவைகர் கூறுகையில்,பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டாலும், மாணவர்கள் பள்ளி சீருடைகளை அணிந்து வர வேண்டிய கட்டாயமில்லை. மாணவர்கள் தாங்கள் விரும்பும் ஆடைகளை அணிந்து வரலாம். பள்ளி சீருடைகளை அணிய அதிகாரிகள் வலியுறுத்தக் கூடாது. தேர்வுகள் ஆஃப்லைன் முறையில் மட்டுமே நடைபெறும். கோவாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருவதால் பள்ளிகளை மீண்டும் திறக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று சவைகர் கூறினார்.
Related Tags :
Next Story