கடற்படை அணி வகுப்பை ராம்நாத் கோவிந்த் நேரில் பார்வையிட்டார்


கடற்படை அணி வகுப்பை  ராம்நாத் கோவிந்த் நேரில் பார்வையிட்டார்
x
தினத்தந்தி 21 Feb 2022 11:37 AM IST (Updated: 21 Feb 2022 11:37 AM IST)
t-max-icont-min-icon

விசாகப்பட்டினத்தில் கடற்படை அணி வகுப்பை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேரில் பார்வையிட்டார்.

ஐதராபாத்,

கிழக்கு கடற்படை கட்டளையின் 12வது அணிவகுப்பு நிகழ்ச்சி இன்று காலை  ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டார்.

 கடற்படையின் அணிவகுப்பை நேரில் பார்வையிட்டார். வங்கக்கடலில் ஐஎன் எஸ் சுமித்ரா கப்பலில் சென்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேரில் பார்வையிட்டார்.  இந்த நிகழ்வில், கடற்படையின் 60 கப்பல்கள், 55 விமானங்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் பங்கேற்றன. இந்நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பங்கேற்றார்.

முன்னதாக நிகழ்வில் பங்கேற்க சென்ற  ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை ஆந்திரப் பிரதேச முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி விமான நிலையத்தில் வரவேற்றார்.

Next Story