ஹிஜாப் சர்ச்சைக்கும் பஜ்ரங் தள் நிர்வாகி கொலைக்கும் தொடர்பு இல்லை: கர்நாடக உள்துறை மந்திரி
பஜ்ரங் தள் நிர்வாகி கொலைக்கும் ஹிஜாப் சர்ச்சைக்கும் எந்த வித தொடர்பும் இருப்பதாக தற்போது வரை நடைபெற்று வரும் விசாரணையில் தெரியவில்லை என மந்திரி தெரிவித்தார்.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம், ஷிவமொகாவில் நேற்று இரவு 9 மணியளவில் பஜ்ரங் தள் ஆர்வலர் ஹர்ஷா(26) மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஷிவமொகா நகரில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவுதால் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளனர். எனினும், ஷிவமொகா நகரில் சில இடங்களில் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. கல் வீச்சு சம்பவங்களும் அரங்கேறியுள்ளன. இதனால், ஷிவமொகா நகரத்தில் பதற்றமான சூழல் காணப்படுகிறது.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த கர்நாடக உள்துறை மந்திரி அரகா ஜனேன்ந்திரா கூறுகையில், “ பஜ்ரங் தள் நிர்வாகி கொலைக்கும் ஹிஜாப் சர்ச்சைக்கும் எந்த வித தொடர்பும் இருப்பதாக தற்போது வரை நடைபெற்று வரும் விசாரணையில் தெரியவில்லை.
எனவே, இந்த கொலை சம்பவத்திற்கும் ஹிஜாப் விவகாரத்திற்கும் தொடர்பு இல்லை. வேறு காரணங்களுக்காக இந்த கொலை நடந்துள்ளது. ஷிவமொகா மிகவும் பதற்றமான நகரமாகும்” என்றார்.
Related Tags :
Next Story