அனைத்து மதத்தினரும் பள்ளி சீருடையை ஏற்றுக்கொள்ள வேண்டும்: உள்துறை அமைச்சர் அமித்ஷா


அனைத்து மதத்தினரும் பள்ளி சீருடையை ஏற்றுக்கொள்ள வேண்டும்: உள்துறை அமைச்சர் அமித்ஷா
x
தினத்தந்தி 21 Feb 2022 7:35 PM IST (Updated: 21 Feb 2022 7:35 PM IST)
t-max-icont-min-icon

அனைத்து மதத்தினரும் பள்ளி சீருடை விதிகளை பின்பற்ற வேண்டும் என ஹிஜாப் விவகாரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கருத்து தெரிவித்தார்.

புதுடெல்லி

கர்நாடகாவில் கல்வி நிலையங்களுக்கு ஹிஜாப் அணிந்து செல்ல அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் விவாதப்பொருளாகியுள்ளது. ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக கர்நாடக ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை  கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில், இவ்விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அனைத்து மதத்தினரும் பள்ளி சீருடையை பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார். பிரபல ஆங்கில தொலைக்காட்சி அளித்த பிரத்யேக பேட்டியில் அமித்ஷா இவ்வாறு தெரிவித்துள்ளார். 

அமித்ஷா கூறுகையில்,  அனைத்து மதத்தினரும் பள்ளி சீருடை விதிகளை பின்பற்ற வேண்டும் என்பது எனது தனிப்பட்ட நம்பிக்கை. தற்போது இந்த விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது, நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. அது என்ன தீர்ப்பை வழங்குகிறதோ அதனை அனைத்து மதத்தினரும் பின்பற்ற வேண்டும்” என்றார். 


Next Story