14 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொடூர கொலை - உடல் அழுகிய நிலையில் மீட்பு
14 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுடெல்லி,
தலைநகர் டெல்லியில் உள்ள சனோத் என்ற கிராமத்தை சேர்ந்த தம்பதியருக்கு 14 வயதில் மகள் உள்ளார். அந்த சிறுமி கடந்த 12-ம் தேதி வீட்டில் இருந்து மாயமானார். இது தொடர்பாக ந்த சிறுமியின் பெற்றோர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அந்த புகார் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில், சனோத் கிராமத்தை சேர்ந்த கடை உரிமையாளர் வெளியூர் சென்றுவிட்டு கடந்த சனிக்கிழமை தனது கடையை திறந்துள்ளார்.
அப்போது, அந்த கடையில் துர்நாற்றம் வீசியுள்ளது. மேலும், தனது கடையில் வேலை பார்த்த உத்தரபிரதேச மாநிலம் ஹர்டோடி மாவட்டத்தை சேர்ந்த 2 ஊழியர்கள் காணவில்லை.
இதனால், சந்தேகமடைந்த கடை உரிமையாளர் துர்நாற்றம் வீசுவது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இந்த தகவலை கொடுத்து அந்த கடை அமைந்துள்ள இடத்திற்கு வந்த போலீசார், கடைக்குள் பின்புறம் ஒரு சாக்குமூட்டைக்குள் அழுகிய நிலையில் ஒரு சிறுமியின் உடல் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
அந்த சிறுமி யார்? என்பதை விசாரித்த போலீசார் 12-ம் தேதி கானாமல் போன 14 வயது சிறுமிதான் இது என்பது தெரியவந்தது.
இதையடுத்து, இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்த போலீசார் சிறுமியின் உடலை பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.
இதனால், கடை உரிமையாளரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, கடையில் வேலை செய்துவந்த உத்தரபிரதேசத்தை சேர்ந்த 2 பேரை கடந்த சில நாட்களாக தொடர்பு கொள்ளமுடியவில்லை அவர்கள் தான் இந்த கொடூரத்தில் ஈடுபட்டிருக்கலாம் என தெரிவித்தார். இதனை தொடர்ந்து, கடையில் வேலை செய்துவந்த 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில், தலைமறைவாக இருந்த கடை ஊழியர்களில் ஒருவனை போலீசார் இன்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அந்த தன்னுடன் வேலை செய்து வந்த ஒரே ஊரை சேர்ந்த மற்றொரு நபருடன் இணைந்து மது போதையில் 14 வயது சிறுமியை கடைக்கு அழைத்து வந்து கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுப்பட்டதாக குற்றத்தை ஒப்புக்கொண்டான்.
மேலும், பாலியல் வன்கொடுமை செய்த பின்னர் அந்த சிறுமியின் கழுத்தை நெறித்து கொலை செய்து உடலை கடைக்கு உள்ள இருந்த சாக்குமூட்டையில் அடைத்துவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டதாக கூறினான்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் குற்றவாளியை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இந்த கொடூர குற்றத்தில் ஈடுபட்ட மற்றொரு குற்றவாளியான உத்தரபிரதேசத்தை சேர்ந்த நபரை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story