சிவமொக்கா கொலை வழக்கை என்.ஐ.ஏ.வுக்கு மாற்ற வேண்டும்- மத்திய மந்திரி ஷோபா கடிதம்
சிவமொக்கா கொலை சம்பவம் குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு மத்திய விவசாயத்துறை இணை மந்திரி கோஷா ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம், சிவமொக்கா நகரை சேர்ந்தவர் ஹர்ஷா(வயது 24). பஜ்ரங்தள் அமைப்பை சேர்ந்த இவரை நேற்று இரவு சிலர் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்கி கொடூரமாக கொலை செய்தனர்.
இச்சம்பவம் சிவமொக்கா நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சிவமொக்கா கொலை சம்பவம் குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு மத்திய விவசாயத்துறை இணை மந்திரி கோஷா ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
சிவமொக்கா நகரில் இன்று ஹர்ஷா கொலை செய்யப்பட்டதின் பின்னணியில் பெரிய அளவில் சதித்திட்டம் இருப்பது தெரியவந்துள்ளது. இந்து அமைப்பில் பணியாற்றிய வாலிபரை குறியாக கொண்டு கொலை செய்யப்பட்டுள்ளது. இத்தகைய கொலைகள் முன்பும் கர்நாடகத்தில் நடந்துள்ளன.
பெங்களூருவில் ருத்ரேஷ் கொலையை பி.எப்.ஐ. அமைப்பு செய்தது நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனால் ஹர்ஷா கொலையின் பின்னணியில் உள்ள சதியை கண்டுபிடிக்க இந்த கொலை வழக்கை உடனடியாக தேசிய புலனாய்வு அமைப்புக்கு (என்.ஐ.ஏ.) மாற்ற வேண்டும். இவ்வாறு ஷோபா குறிப்பிட்டுள்ளார்.
Related Tags :
Next Story