2 ஆண்டுகளுக்கு பிறகு கேரளாவில் பள்ளிகள் திறக்கப்பட்டன


2 ஆண்டுகளுக்கு பிறகு கேரளாவில் பள்ளிகள் திறக்கப்பட்டன
x
தினத்தந்தி 21 Feb 2022 11:28 PM IST (Updated: 21 Feb 2022 11:28 PM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் 2 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டன.

திருவனந்தபுரம், 

கேரளாவில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன. அப்போது முதல் 1-ம் வகுப்பு தொடங்கி 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவே கல்வி பயின்று வந்தனர்.

இந்த நிலையில் கேரளாவில் தற்போது கொரோனா பரவல் வெகுவாக குறைந்துள்ளதை தொடர்ந்து, கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு பிறகு இன்று அங்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. முக கவசம் அணிவது, கிருமிநாசினி பயன்படுத்துவது, உடல்வெப்ப பரிசோதனை உள்ளிட்ட அனைத்து விதமான வழிகாட்டுதல்களையும் பின்பற்றி வகுப்புகள் நடைபெற்றன.

2 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் ஆர்வத்துடன் பள்ளிகளுக்கு படையெடுத்தனர். இதனால் முதல் நாளாள இன்று கிட்டத்தட்ட 82.77% வருகை பதிவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

Next Story