எல்லைப்புற உள்கட்டமைப்பு வசதிகளுக்கு ரூ.13 ஆயிரம் கோடி - மத்திய அரசு ஒப்புதல்
எல்லைப்புற உள்கட்டமைப்பு வசதிகளுக்கு ரூ.13 ஆயிரம் கோடி ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
புதுடெல்லி,
15-வது நிதி குழுவின் காலமான 2021-2022 முதல் 2025-2026 நிதி ஆண்டு வரை எல்லைப்புற உள்கட்டமைப்பு திட்டத்தை தொடருவதற்காக ரூ.13 ஆயிரத்து 20 கோடி ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்படி பாகிஸ்தான், வங்காளதேசம், சீனா, நேபாளம், பூடான், மியான்மர் ஆகிய நாடுகளுடனான எல்லைப்புறத்தில் உள்கட்டமைப்பு வசதிகள் நிறுவப்படும். எல்லையில் வேலி அமைத்தல், புறக்காவல் நிலையங்கள் அமைத்தல், பிரமாண்ட விளக்குகள், சாலைகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு பணிகள் நிறைவேற்றப்படும்.அத்துடன், உயர் தொழில்நுட்ப மின்னணு கண்காணிப்பு சாதனங்களும் பொருத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story