இமாசல பிரதேசம் வெடி விபத்தில் 7 பேர் பலி: பிரதமர் மோடி இரங்கல்
இமாசல பிரதேசத்தில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.
புதுடெல்லி,
இமாசல பிரதேசம் உனா பகுதியில் அமைந்துள்ள பட்டாசு ஆலையில் இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் 7 பேர் பலியாகினர். 12 பேர் தீக்காயம் அடைந்தனர். இந்த விபத்தில் பலியனவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, “ வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ. 2 லட்சமும் காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும்” எனப்பதிவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story