இந்தியாவில் சற்று அதிகரித்த தினசரி கொரோனா பாதிப்பு!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15,102 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புதுடெல்லி,
இந்தியாவில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. நேற்று 13,405 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,102 ஆக உயர்ந்தது.
இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியே 28 லட்சத்து 67 ஆயிரத்து 31 ஆக உயர்ந்தது.தினசரி கொரோனா பாதிப்பு விகிதம் 1.28 சதவீதம் ஆக உள்ளது.
சிகிச்சை பெறுவோர்
கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்து வருகிறது.இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 1 லட்சத்து 64 ஆயிரத்து 522 ஆக குறைந்தது.
குணம் அடைந்தோர்
நேற்று ஒரு நாளில் கொரோனா தொற்றில் இருந்து 31 ஆயிரத்து 377 பேர் குணம் அடைந்துள்ளனர்.இதுவரையில் இந்த தொற்றில் இருந்து குணம் அடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 21 லட்சத்து 89 ஆயிரத்து 887 ஆக உயர்ந்துள்ளது.
உயிரிழப்பு
கொரோனாவால் ஏற்படுகிற உயிரிழப்பு தொடர்ந்து சரிகிறது. நேற்று 235 பேர் இந்த தொற்றால் உயிரிழந்த நிலையில், இன்று இந்த எண்ணிக்கை 278 ஆக உயர்ந்தது. இதுவரை இந்த தொற்றால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 12 ஆயிரத்து 622 ஆக அதிகரித்துள்ளது.
தடுப்பூசி டோஸ்
நாட்டில் மொத்தம் இதுவரை 176 கோடியே 19 லட்சத்து 39 ஆயிரத்து 20 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 33 லட்சத்து 84 ஆயிரத்து 744 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டது.
Related Tags :
Next Story