உத்தரபிரதேச 4-ம் கட்ட தேர்தல் : மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் வாக்களித்தார்
இன்று 4-ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலத்தில் சட்டசபை தேர்தல் ,7 கட்டமாக நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, முதல் மூன்று கட்ட தேர்தல்கள் நிறைவடைந்துவிட்டன. இந்நிலையில், இன்று 4-ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
அதன்படி, உ.பி.யில் 9 மாவட்டங்களில் உள்ள 59 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது .வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ,லக்னோவில் உள்ள வாக்குச்சவடியில் வாக்கு அளித்தார்.
Related Tags :
Next Story