உ.பி. 4-ம் கட்ட தேர்தல்: மதியம் 1 மணி நிலவரப்படி - 37.45% வாக்குப்பதிவு


உ.பி. 4-ம் கட்ட தேர்தல்:  மதியம் 1 மணி நிலவரப்படி - 37.45% வாக்குப்பதிவு
x
தினத்தந்தி 23 Feb 2022 2:06 PM IST (Updated: 23 Feb 2022 2:06 PM IST)
t-max-icont-min-icon

உ.பி.யில் 4-ம் கட்ட சட்டப்சபை தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 37.45% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலத்தில் சட்டசபை தேர்தல் ,7 கட்டமாக  நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, முதல் மூன்று கட்ட தேர்தல்கள் நிறைவடைந்துவிட்டன. இந்நிலையில், இன்று 4-ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி விறு விறுப்புடன்  நடைபெற்று வருகிறது.

அதன்படி, உ.பி.யில்  9 மாவட்டங்களில் உள்ள 59 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது .காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.

59 தொகுதிகளில் களம் காணும் 624 வேட்பாளர்கள்: இன்று வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் லக்கிம்பூர் தொகுதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. 

மத்திய இணை மந்திரி அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா சென்ற கார் ஏறி விவசாயிகள் பத்திரிகையாளர் உள்பட 6 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவத்திற்குப் பின்னர் உ.பி.யில் பாஜக விவசாயிகள் ஆதரவை பெருமளவில் இழந்துவிட்டதாகக் கூறப்பட்டது.

சோனியா காந்தியின் கோட்டையான் ரே பரேலி, பாஜக எம்.பி. வருண் காந்தியின் தொகுதியான பிலிபிட் என பல முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 

இந்தநிலையில் மதியம் 1 மணி நிலவரப்படி அங்கு 37.45% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அடுத்ததாக 5,6,7 ஆம் கட்ட தேர்தல்கள் முறையே பிப்ரவரி 27, மார்ச் 3 மற்றும் 7 தேதிகளில் நடைபெறுகிறது.  

Next Story