உத்தர பிரதேசத்தில் 4- ஆம் கட்ட தேர்தல்; வாக்குப்பதிவு நிறைவு
மாலை 5 மணி நிலவரப்படி 57.45 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலத்தில் சட்டசபை தேர்தல் ,7 கட்டமாக நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, முதல் மூன்று கட்ட தேர்தல்கள் நிறைவடைந்துவிட்டன. இந்நிலையில், இன்று 4-ம் கட்ட தேர்தல் இன்று நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது. வாக்குப்பதிவு மிகவும் விறு விறுப்புடன் நடைபெற்றது.
இன்று தேர்தல் நடைபெற்ற 59 தொகுதிகளில், 50 தொகுதிகள் கடந்த தேர்தலில் பா.ஜனதா வென்ற தொகுதிகள் ஆகும். இவற்றில், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின் சொந்த தொகுதியான ரேபரேலி அடங்கிய ரேபரேலி மாவட்டமும், 4 விவசாயிகள் கார் ஏற்றிக் கொல்லப்பட்ட சம்பவம் நடந்த லக்கிம்பூர் கேரி மாவட்டமும் அடங்கும்.
வாக்குப்பதிவை முன்னிட்டு தேர்தல் நடைபெறும் இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. வாக்குப்பதிவு எந்த வித அசம்பாவிதங்களும் இன்றி அமைதியாக நடந்து முடிந்துள்ளது. மாலை 5 மணி நிலவரப்படி 57.45 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
Related Tags :
Next Story