தோழியை தேடிசென்ற பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் ;விஷம் குடித்து தற்கொலை
போலீஸ் கான்ஸ்டபிள் உட்பட நான்கு பேரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட பெண் பின்னர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஹைதராபாத்,
தெலுங்கானா மாநிலத்தில் 23 வயது பெண், தன்னை ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் உட்பட நான்கு பேர் கொண்ட கும்பல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டி, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
நேற்று தெலுங்கானா மாநிலம் மகபூபாபாத் மாவட்டத்தில் உள்ள நெல்லிக்குதூர் போலீஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குட்ம்பத்தார் புகார் ஒன்று அளித்துள்ளனர்.
புகாரில் பிப்ரவரி 16 அன்று, பாதிக்கப்பட்ட பெண் இரவு தங்குவதற்காக தனது தோழியின் வீட்டிற்குச் சென்றபோது கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளார். அதன் பின் பிப்ரவரி 17 ஆம் தேதி அதே தோழியை மீண்டும் சென்றபோது மீண்டும் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
மறுநாள் அந்த பெண் காலை 8 மணியளவில் விஷம் குடித்து உள்ளார். அவரது சகோதரர் உடனடியாக அவரை மகபூபாபாத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
அங்கு மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி பிப்ரவரி 22 செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
பிப்ரவரி 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நான்கு பேர் கூட்டு பலாத்காரம் செய்ததால் தான் அவர் விஷம் குடித்ததாக குற்றம் சாட்டபட்டுள்ளது.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், உடனடியாக சந்தேகத்தின் பேரில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் மூவரை கைது செய்துள்ளனர். அதில் ஒருவர் போலீஸ் கான்ஸ்டபிள் மற்றொருவர் மண்டல் பரிஷத் பிராந்தியத் தொகுதி உறுப்பினரின் கணவர் என போலீசார் கூறியுள்ளனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
Related Tags :
Next Story