உக்ரைன்-ரஷியா போர் எதிரொலி: உக்ரைனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் திரும்ப அழைக்கப்பட்டது
உக்ரைன்-ரஷியா போர் எதிரொலியாக உக்ரைனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் திரும்ப அழைக்கப்பட்டது.
புதுடெல்லி,
ரஷிய படைகளின் முற்றுகையில் சிக்கியுள்ள உக்ரைனில் இருந்து இந்திய மாணவர்களை அழைத்து வருவதற்காக ஏர் இந்தியா சிறப்பு விமானம் நேற்று புறப்பட்டது. காலை 7.30 மணிக்கு அது டெல்லியில் இருந்து கிளம்பியது.
ஆனால், ரஷியா ராணுவ நடவடிக்கையை அறிவித்ததால், உக்ரைன் தனது வான்மண்டலத்தில் பயணிகள் விமானங்கள் பறக்க தடை விதித்தது. இதனால், உக்ரைனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லிக்கு திரும்ப அழைக்கப்பட்டது. அதே சமயத்தில், உக்ரைனில் இருந்து 182 பயணிகளுடன் உக்ரைன் சர்வதேச ஏர்லைன்சின் சிறப்பு விமானம் நேற்று டெல்லிக்கு வந்து சேர்ந்தது.
Related Tags :
Next Story