உக்ரைனில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை கத்தார் வழியாக தாயகம் அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு


உக்ரைனில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை கத்தார் வழியாக தாயகம் அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு
x
தினத்தந்தி 25 Feb 2022 1:23 AM IST (Updated: 25 Feb 2022 1:23 AM IST)
t-max-icont-min-icon

உக்ரைனில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை கத்தார் வழியாக தாயகம் அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு செய்து வருகிறது.

புதுடெல்லி,

உக்ரைன் மீது ரஷியா போர் தாக்குதலை தொடங்கியுள்ளது. அங்கு தமிழக மாணவர்கள் உள்பட 20 ஆயிரம் பேர் சிக்கியுள்ளனர். உக்ரைனின் வான்வழிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் விமானம் மூலமாக அங்கிருந்து இந்தியர்களை மீட்க இயலவில்லை.

மாற்றுவழியாக உக்ரைனில் இருந்து வாகனம் மூலமாக எல்லையோரப்பகுதியில் உள்ள நாடுகளுக்கு இந்தியர்களை அழைத்துவந்து பின்னர் கத்தாரில் இருந்து விமானம் மூலமாக தாயகம் அழைத்து வர இந்திய வெளியுறவுத்துறை திட்டமிட்டுள்ளது.

இந்த தகவலை உக்ரைன் நாட்டுக்கான இந்திய தூதரகம் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளது.

எனவே உக்ரைனின் அண்டை நாடான ஹங்கேரி எல்லையில் இந்திய தூதரகக்குழு தயாராக உள்ளது. இந்த குழு இந்தியர்களை அழைத்துவந்து தாயகம் அனுப்ப ஏற்பாடு செய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் போலந்து, சுலோவாக்கியா, நாட்டு எல்லையிலும் தூதரக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

Next Story