உக்ரைனில் இருந்து இந்தியர்களை உரிய நேரத்தில் அழைத்துவர நடவடிக்கை எடுக்காதது ஏன்? - காங்கிரஸ் கேள்வி
உக்ரைனில் இருந்து 20 ஆயிரம் இந்தியர்களை உரிய நேரத்தில் அழைத்துவர நடவடிக்கை எடுக்காதது ஏன் என காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது.
புதுடெல்லி,
காங்கிரஸ் தலைமை செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
போர் மூண்டுள்ள உக்ரைனில் வசித்து வரும் 20 ஆயிரம் இந்திய இளைஞர்கள், அவரவர் இடத்திலேயே இருக்குமாறு மத்திய அரசு கூறியுள்ளது. அவர்களை உரிய நேரத்தில் இந்தியாவுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்காதது ஏன்?
பிரதமர் மோடி, தேர்தல் பிரசாரத்தில்தான் தீவிர கவனம் செலுத்தினார். சிக்கலான தருணங்களில் முகத்தை திருப்பிக் கொள்வதும், மவுனம் சாதிப்பதும் மோடி அரசின் வாடிக்கையாகி விட்டது.
அதனால், உக்ரைனில் இந்தியர்கள் அச்சத்தின் பிடியில் வாழும்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அவர்களது பாதுகாப்பில் மோடி அரசு அக்கறை செலுத்தவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story