விசாகப்பட்டினத்தில் ‘மிலான் 2022’ கடற்படை கூட்டுப் பயிற்சி தொடக்கம்


விசாகப்பட்டினத்தில் ‘மிலான் 2022’ கடற்படை கூட்டுப் பயிற்சி தொடக்கம்
x
தினத்தந்தி 25 Feb 2022 5:13 PM IST (Updated: 25 Feb 2022 5:13 PM IST)
t-max-icont-min-icon

‘மிலான் 2022’ கடற்படை கூட்டுப் பயிற்சியில் 40-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்றுள்ளன.

விசாகப்பட்டினம்,

இந்திய கடற்படை சார்பில், ‘மிலான் 2022’ எனப்படும் கடற்படை கூட்டுப்பயிற்சி, விசாகப்பட்டினத்தில் இன்று தொடங்குகிறது. ‘தோழமை, ஒற்றுமை, ஒத்துழைப்பு’ என்ற கருப்பொருளை அடிப்படையாக கொண்டு ‘மிலான் 2022’ கூட்டுப்பயிற்சி நடத்தப்படுகிறது. இன்று முதல் 9 நாட்களுக்கு இந்த பயிற்சி நடைபெறுகிறது. 

இந்த பயிற்சியில் 40-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்றுள்ளன. இந்த பயிற்சி 2 கட்டங்களாக நடத்தப்படுகிறது. பிப்ரவரி 25(இன்று) முதல் பிப்ரவரி 28 வரை துறைமுகம் சார்ந்தும், மார்ச் 1 முதல் மார்ச் 4 வரை கடல் சார்ந்தும் பயிற்சி மேற்கொள்ளப்பட உள்ளது. 

கடல்சார் படைகளின் செயல்பாட்டு திறன்களை வளர்த்துக்கொள்வது, சிறந்த நடைமுறைகளை பகிர்ந்துகொள்வது மற்றும் கடற்படைகளுக்கு இடையிலான தொழில்முறை தொடர்பை மேம்படுத்துவது ஆகியவை இந்த பயிற்சியின் நோக்கமாக கூறப்பட்டுள்ளது. மேலும் ‘மிலான் 2022’ மூலம் உலக அளவில் இந்தியாவை முக்கிய கடல்சார் சக்தியாக நிறுவ முடியும் என இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.

Next Story