அசாம் எல்லையில் 209 கிலோ வெடிபொருட்கள்; மேகாலயா போலீசார் பறிமுதல்
அசாமில் 209 கிலோ எடை கொண்ட வெடிபொருட்களை எல்லையில் மேகாலயா போலீசார் கைப்பற்றினர்.
கவுகாத்தி,
அசாம் மற்றும் மேகாலயா இடையே எல்லை விவகாரம் நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க, அசாம்-மேகாலயா எல்லையில் கடத்தல் சம்பவங்களும் நடந்து வருகின்றன. இந்நிலையில், மேகாலயா போலீசார் எல்லை பகுதியில் சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
இதில், அசாம் மற்றும் மேகாலயா எல்லையில் அமைந்த ரி-போய் மாவட்டத்தில் பைர்னிஹத் பகுதியில் வாகனம் ஒன்று சந்தேகத்திற்குரிய வகையில் சென்றுள்ளது. இதனை மறித்து சோதனை நடத்தியதில், வெடிபொருட்களை மறைத்து கொண்டு சென்றது தெரிய வந்தது.
இந்த சம்பவத்தில் 3 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் போதிய ஆவணங்களும் இல்லை என்பது தெரிய வந்தது. அவர்களது வாகனத்தில் 209.93 கிலோ எடை கொண்ட ஜெலாட்டின் குச்சிகள், அலுமினியம் கலந்த எலெக்ட்ரிக் டெட்டனேட்டர்கள் மற்றும் வேறு வகை டெட்டனேட்டர்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.
கடந்த 16ந்தேதியும், பைர்னிஹத் பகுதியில் நடந்த சோதனையில் அதிக அளவிலான வெடிபொருட்களை மேகாலயா போலீசார் கைப்பற்றி இருந்தனர்.
Related Tags :
Next Story