பிரிட்டனில் நடைபெறும் போர்விமான பயிற்சியில் பங்கேற்பில்லை: இந்தியா
பிரிட்டனில் நடைபெறும் போர் விமான பயிற்சியில் பங்கேற்க போவது இல்லை என இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
உக்ரைன் - ரஷிய போர் தீவிரம் அடைந்துள்ளது. கடும் எச்சரிக்கையையும் மீறி உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷியா மீது பொருளாதார தடைகளை ஐரோப்பிய யூனியன் விதித்து வருகிறது.
இதனிடையே, பிரிட்டனில் நடைபெறும் கோப்ரா வாரியர் 2022- என்ற விமானப்படை கூட்டுப் பயிற்சியில் இந்தியா பங்கேற்காது என இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
இந்தியா சார்பில் 5 தேஜாஸ் வகை போர் விமானங்கள் பயிற்சியில் ஈடுபட இருந்த நிலையில், தற்போது உள்ள சூழலில் பங்கேற்க வேண்டாம் என முடிவு செய்து இருப்பதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story