டெல்லியில் கார்களில் பயணம் செய்வோர் இனி முகக்கவசம் அணிய வேண்டாம்!


டெல்லியில் கார்களில் பயணம் செய்வோர் இனி முகக்கவசம் அணிய வேண்டாம்!
x
தினத்தந்தி 26 Feb 2022 9:49 PM IST (Updated: 26 Feb 2022 9:49 PM IST)
t-max-icont-min-icon

தலைநகர் டெல்லி மற்றும் புறநகர் பகுதிகளில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் இந்த தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் சொந்த கார்கள் மற்றும் சொந்தமாக நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருப்போர், தங்கள் வாகனங்களில் பயணம் செய்யும் போது முக்ககவசம் அணிய வேண்டிய கட்டாயமில்லை என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது. 

ஆனால் வாடகை கார்கள், டாக்சிகள் மற்றும் இதர வாடகை வாகனங்களில் பயணம் செய்வோர் கட்டாயம் முக்ககவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த தளர்வு நாளை மறுநாள்(திங்கட்கிழமை) முதல் அமலாகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

லெப்டினண்ட் கவர்னர் அனில் பைஜால் தலைமையிலான டெல்லி பேரழிவு மேலாண்மை ஆணையம் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பொது இடங்களில் முககவசம் அணியாததற்கு விதிகப்பட்ட அபராதம் ரூ.2000த்திலிருந்து ரூ.500 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வு அளிக்கும்படி டெல்லி ஐகோர்ட் கடந்த பிப்ரவரி 2ந்தேதி அன்று மாநில அரசுக்கு அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து தனியாக பயணம் செய்யும் டிரைவர்கள் மட்டும் முகக்கவசம் அணிய வேண்டாம் என்று டெல்லி அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தலைநகர் டெல்லி மற்றும் புறநகர் பகுதிகளில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் இந்த தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், டெல்லியில் உள்ள பள்ளிகளில் நேரடி வகுப்புகள் ஏப்ரல் 1ம் தேதி முதல் தொடங்க உள்ளது. 

டெல்லியில் நேற்று 460 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியான நிலையில், இன்று அந்த பாதிப்பு 440 ஆக குறைந்தது. கொரோனா பாதிப்பால் அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.

Next Story