முஸ்லிம்களின் வாக்குரிமையை பறிக்க வேண்டும்- பீகார் பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு


முஸ்லிம்களின் வாக்குரிமையை பறிக்க வேண்டும்- பீகார் பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு
x
தினத்தந்தி 27 Feb 2022 12:18 PM IST (Updated: 27 Feb 2022 12:18 PM IST)
t-max-icont-min-icon

முஸ்லிம்களுக்கு வாக்குரிமை இருக்கக்கூடாது என்றும், அந்த சமூகம் இந்தியாவில் "இரண்டாம் தர குடிமக்களாக" வாழ வேண்டும் என்றும் பாஜக எம்.எல்.ஏ பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாட்னா,

பீகார் பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) பிஸ்பி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஹரிபூஷன் தாக்கூர் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிடுவதில் பெயர் பெற்றவர்.

 அந்த வகையில், கடந்த 25 ஆம் தேதி, தாக்கூர்  பத்திரிக்கையாளரிடம்,  1947 ல் பிரிவினையின் போது முஸ்லிம்களுக்கு தனி நாடு வழங்கப்பட்டதால், அவர்கள் பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டும். அவர்கள் இந்தியாவில் வாழ்ந்தால், அவர்கள் இரண்டாம் தர குடிமக்களாக வாழ வேண்டும். முஸ்லிம்கள் இந்தியாவை "இஸ்லாமிய நாடாக" மாற்ற விரும்புவதாகவும், முஸ்லீம்களின் வாக்குரிமையை பறிக்குமாறு அரசாங்கத்தை நாங்கள் வலியுறுத்துகிறோம் என்று  கூறினார். 

இதுகுறித்து, மாநில பாஜக தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வால் கூறுகையில்,"தாக்குரின் அறிக்கையிலிருந்து நாங்கள் ஏற்கனவே விலகிவிட்டோம், மேலும் அவர் ஏன் சொன்னார் என்று விளக்கமளிக்க  நோட்டீஸ் அனுப்பியுள்ளோம்" என்றார். 

சமீபத்தில், சமூக ஊடகங்களில் வைரலான ஒரு வீடியோவில், பீகாரின் கிழக்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள கோவிந்த்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ சுனில் மணி திவாரி தனது தொகுதி மக்களிடம் கூறுகையில் “யாராவது இந்தியாவில் வாழ வேண்டும் என்றால், அவர் ராதே-ராதே என்று சொல்ல வேண்டும். , ஜெய் ஸ்ரீ ராம் மற்றும் வந்தே மாதரம். இது மோடி [பிரதமர்] மற்றும் யோகி [உ.பி. முதல்வர்] அரசு” என கூறியது குறிப்பிடத்தக்கது.


Next Story