தாய்மொழியை பெருமையுடன் பேசுங்கள்: இளைஞர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்
உலகின் பழமையான மொழி ’தமிழ்' இந்தியாவில் உள்ளது. இந்த குறிப்பிடத்தக்க பாரம்பரியத்திற்காக இந்தியர்கள் பெருமைப்பட வேண்டும் என்று பிரதமர் மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசினார்.
புதுடெல்லி,
இந்தியாவின் உள்ள பலதரப்பட்ட மொழிகளில் உள்ள திரைப்பட பாடல்களை கொண்டு வீடியோ உருவாக்கி வெளியிட வேண்டும் என்று இளைஞர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இப்படி செய்வதன் மூலம், இந்தியாவின் பன்முகத்தன்மையை புதிய தலைமுறையினருக்கு வெளிக்காட்டுவதோடு தங்களை பிரபலப்படுத்தவும் உதவும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மன் கி பாத் நிகழ்ச்சியில் இன்று உரையாற்றிய பிரதமர் மோடி மேற்கண்டவாறு கூறினார். பிரதமர் மோடி மன் கி பாத் நிகழ்ச்சியில் மேலும் கூறியதாவது: - இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும், தங்களின் மொழி, ஆடை, உணவு, குடிநீர் தொடர்பாக மக்களுக்கு தயக்கங்கள் மற்றும் தடுமாற்றம் உள்ளது. அதேசமயம், உலகில் வேறு எங்கும் இது போல் இல்லை. மக்கள் தங்கள் தாய்மொழியில் பெருமையுடன் பேச வேண்டும். மொழி வளத்தில் இந்தியா ஒப்பற்றது.
நம் வாழ்க்கையை தாய் எப்படி வடிவமைக்கிறாரோ, அதைப்போல தாய்மொழியும் நம் வாழ்க்கையை வடிவமைக்கிறது. வாழ்க்கையின் அடித்தளத்தை தாய்மொழி வலுப்படுத்துகிறது. நாம் நமது தாயை எப்படி கைவிட முடியாதோ அதைப்போல நமது தாய்மொழியையும் நாம் கைவிட முடியாது.
உலகின் பழமையான மொழியான ’தமிழ்' இந்தியாவில் உள்ளது. இந்த குறிப்பிடத்தக்க பாரம்பரியத்திற்காக இந்தியர்கள் பெருமைப்பட வேண்டும். அதே வழியில், பல பண்டைய வேதங்கள் சமஸ்கிருதத்தில் உள்ளன. 121 வகையான தாய்மொழியை கொண்டிருப்பதில் இந்தியர்கள் பெருமிதம் கொள்கிறார்கள். இவற்றில் 14 மொழிகளை 1 கோடிக்கும் மேற்பட்ட மக்களால் தங்கள் அன்றாட வாழ்க்கையில் பேசப்படுகிறது. பல ஐரோப்பிய நாடுகளில் இந்த அளவுக்கு மக்கள் தொகை கூட கிடையாது.
கடந்த 2019- ஆம் ஆண்டில், உலகில் அதிகம் பேசப்படும் மொழிகளில் இந்தி 3 ஆம் இடம் பிடித்தது. இதற்காக ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்பட வேண்டும். மொழி நமது எண்ணங்களை வெளிப்படுத்தும் ஒரு கருவி மட்டும் அல்ல. ஆனால் சமூகத்தின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பாதுகாக்க உதவுகிறது” என்றார்.
Related Tags :
Next Story