ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 7 வயது சிறுவன் - மீட்கும் பணி தீவிரம்
ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 7 வயது சிறுவனை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
போபால்,
மத்திய பிரதேச மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 7 வயது சிறுவனை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
மத்திய பிரதேச மாநிலம் தாமோ மாவட்டத்தைசை் சேர்ந்த சிறுவன் பிரியான்ஷ் வயது 7). குடும்பத்தினருடன் தோட்டத்திற்கு சென்ற போது மூடாமல் வைக்கப்பட்டிருந்த 300 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் சிறுவன் பிரியான்ஷ் தவறி விழுந்துவிட்டான்.
சிறுவன் ஆழ்துளை கிணற்றில் 15 முதல் 20 அடி ஆழத்தில் சிக்கியிருப்பதால் ஜேசிபி மூலம் குழியை சுற்றி பள்ளம் தோன்றி சிறுவனை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
கடந்த 4 நாட்களில் மத்திய பிரதேசத்தில் நடைபெறும் 2 வது சம்பவம் இது. கடந்த வெள்ளிக்கிழமை இதேபோல் 4 வயது சிறுவன் ஒருவன் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். 16 மணிநேர போராட்டத்திற்கு பிறகு சிறுவனை மீட்டனர். ஆனால் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
Related Tags :
Next Story