உத்தர பிரதேசம் 5-வது கட்ட தேர்தல்: மாலை 5 மணி நிலவரப்படி 53.98 % வாக்குப்பதிவு
மாலை 5 மணி நிலவரப்படி 53.98 % வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
லக்னோ,
உத்தரபிரதேசத்தில் 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. ஏற்கனவே 4 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் அங்குள்ள 12 மாவட்டங்களில் உள்ள அயோத்தி, அமேதி உள்ளிட்ட 61 தொகுதிகளில் இன்று தேர்தல் நடந்து வருகிறது.
இன்று காலை 7 மணிக்கு தொடங்கி உள்ள வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் முடிவடைகிறது. வாக்காளர்கள் வரிசையில் நின்று தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.
*இன்று காலை 7 மணி முதல் 1 மணி வரையிலான நிலவரப்படி, 34.83% வாக்குகள் பதிவாகியிருந்தது.
*பிற்பகல் 3 மணி நிலவரப்படி 46.28 % வாக்குகள் பதிவானது.
*மாலை 5 மணி நிலவரப்படி 53.98 % வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story