உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகள் குறித்து அறிய புதிய டுவிட்டர் பக்கம் உருவாக்கம்!
இந்த புதிய டுவிட்டர் பக்கத்திற்கு ‘ஓப்கங்கா ஹெல்ப்லைன்’ என பெயரிடப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை பத்திரமாக மீட்டு வரும் ஆபரேஷன் கங்கா திட்டத்தின் ஒரு பகுதியாக புதிதாக டுவிட்டர் பக்கம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
அந்த டுவிட்டர் பக்கத்தில், உக்ரைனில் சிக்கியுள்ளவர்களை இந்தியாவுக்கு அழைத்து வரும் விமான சேவை மற்றும் இந்தியர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய தகவல்கள் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும் என தெரிகிறது.
இந்த புதிய டுவிட்டர் பக்கத்திற்கு ‘ஓப்கங்கா ஹெல்ப்லைன்’ என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த தகவலை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் அரிந்தாம் பாக்சி தெரிவித்தார்.
A dedicated Twitter handle has been set up to assist in the evacuation of Indians from Ukraine: MEA Spokesperson Arindam Bagchi pic.twitter.com/F0GA5BP0Dd
— ANI (@ANI) February 27, 2022
Related Tags :
Next Story