மராட்டியத்தில் புதிதாக 782 பேருக்கு கொரோனா


மராட்டியத்தில் புதிதாக 782 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 28 Feb 2022 2:00 AM IST (Updated: 28 Feb 2022 2:00 AM IST)
t-max-icont-min-icon

மராட்டிய மாநிலத்தின் தலைநகர் மும்பையில் நோய் தொற்று பாதிப்பு முற்றிலுமாக சரிந்துள்ளது.

மும்பை,

மராட்டியத்தில் நேற்று 80 ஆயிரத்து 275 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதிதாக 782 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் மராட்டியத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 78 லட்சத்து 65 ஆயிரத்து 298 ஆக உயர்ந்தது.

நவிமும்பை மற்றும் சோலாப்பூரில் தலா ஒருவர் என 2 பேர் நோய் தொற்றால் இறந்தனர். இதன்மூலம் கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 43 ஆயிரத்து 697 ஆக உயர்ந்தது.

நேற்று மாநிலத்தில் 1,361 பேர் தொற்றில் இருந்து குணமாகினர். இதன்மூலம் நோயில் இருந்து விடுபட்டவர்களின் எண்ணிக்கை 77 லட்சத்து 10 ஆயிரத்து 376 ஆக உயர்ந்தது. தற்போது மாநிலத்தில் 7 ஆயிரத்து 228 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தலைநகர் மும்பையில் நோய் தொற்று பாதிப்பு முற்றிலுமாக சரிந்துள்ளது. நேற்று வெறும் 103 பேருக்கு மட்டுமே தொற்று கண்டறியப்பட்டது. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்து 56 ஆயிரத்து 399 ஆக உயர்ந்தது. நேற்று இறப்பு ஏதும் பதிவாகவில்லை. இதன்மூலம் இறப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்து 691 ஆக தொடர்கிறது.

மும்பையில் நோயில் இருந்து விடுபட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்து 35 ஆயிரத்து 991 ஆக உள்ளது. இதில் நேற்று குணமான 165 பேரும் அடங்குவர். தற்போது 838 பேர் நகரில் சிகிச்சையில் உள்ளனர். மும்பையில் தற்போது சீல் வைக்கப்பட்ட கட்டிடங்கள், கட்டுப்பாட்டு மண்டலங்கள் எதுவும் இல்லை.

Next Story