இந்தியாவில் ஹிஜாபுக்கு தடை இல்லை - மத்திய மந்திரி உறுதி

இந்தியாவில் ஹிஜாபுக்கு தடை இல்லை - மத்திய மந்திரி உறுதி
x
தினத்தந்தி 28 Feb 2022 4:34 AM IST (Updated: 28 Feb 2022 4:34 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகாவின் சில கல்வி நிறுவனங்களில் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன் அங்கு பெரும் போராட்டமும், பதற்றமும் ஏற்பட்டது.

ஐதராபாத், 

கர்நாடகாவின் சில கல்வி நிறுவனங்களில் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன் அங்கு பெரும் போராட்டமும், பதற்றமும் ஏற்பட்டது.

இந்த தடைக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டமும் வெடித்தது. இந்த விவகாரம் தற்போது மாநில ஐகோர்ட்டு விசாரணையில் உள்ளது. இந்த நிலையில் தெலுங்கானாவில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த மத்திய சிறுபான்மையினர் நலத்துறை மந்திரி முக்தர் அப்பாஸ் நக்வியிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர், இந்தியாவில் ஹிஜாபுக்கு தடை இல்லை என கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், ‘இந்த விவகாரம் தற்போது கோர்ட்டில் உள்ளது. இந்த நாட்டில் எந்த உடையையும் அணிய மக்களுக்கு உரிமை இருக்கிறது. சில நிறுவனங்கள் சில உடை கட்டுப்பாடுகளை பின்பற்றலாம். உரிமைகளைப்போல கடமைக்கும் சமமான முக்கியத்துவம் உண்டு என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்’ என்று தெரிவித்தார்.

Next Story