இந்தியர்களை மீட்பது குறித்த செயல்திட்டத்தை வெளியிட வேண்டும்: மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கோரிக்கை
உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்பதற்கான செயல் திட்டத்தை மத்திய அரசு வெளியிட வேண்டும் என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.
உக்ரைன்,
ரஷியாவின் போர் நடவடிக்கையால் உக்ரைன் சின்னாபின்னமாகி வருகிறது. அங்கு ஏவுகணை, பீரங்கி தாக்குதல்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.
போர் பதற்றத்தால் உக்ரைனில் வாழும் மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளை நோக்கி தஞ்சம் அடைந்து வருகிறார்கள். கல்வி, வேலைவாய்ப்புக்காக உக்ரைனுக்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் சென்றிருந்தனர்.
உக்ரைன் வான்பகுதி மூடப்பட்ட நிலையில், அண்டை நாடுகளின் எல்லைக்கு வரவழைத்து இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. ‘ஆபரேசன் கங்கா’ என்ற பெயரில் இந்த மீட்புப்பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
ருமேனியா தலைநகர் புக்காரெஸ்டிலிருந்து 249 இந்தியர்களுடன் 5வது சிறப்பு விமானம் இன்று டெல்லி வந்தடைந்தது. இதன்படி உக்ரைனில் இருந்து இதுவரை 1,156 இந்தியர்கள் தாயகம் திரும்பி உள்ளனர்.
இந்த நிலையில் உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்பதற்கான செயல் திட்டத்தை வெளியிட வேண்டும் என மத்திய அரசை காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளதாவது:
My heart goes out to the Indian students suffering such violence and their family watching these videos. No parent should go through this.
— Rahul Gandhi (@RahulGandhi) February 28, 2022
GOI must urgently share the detailed evacuation plan with those stranded as well as their families.
We can’t abandon our own people. pic.twitter.com/MVzOPWIm8D
இந்தக் காணொளிகளைப் பார்க்கும் போது இதுபோன்ற வன்முறைகளால் பாதிக்கப்படும் இந்திய மாணவர்களுக்காகவும், அவர்களது குடும்பத்தினருக்காகவும் நான் வருந்துகிறேன். எந்த பெற்றோருக்கும் இது போன்ற நிலைமை வந்துவிட கூடாது. உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்பதற்கான செயல் திட்டத்தை மத்திய அரசு வெளியிட வேண்டும். நமது மக்களை நாம் கைவிட கூடாது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story