சர்வதேச பயணிகள் விமான சேவை நிறுத்தம் தொடரும்...!- அறிவிப்பு


சர்வதேச பயணிகள் விமான சேவை நிறுத்தம் தொடரும்...!- அறிவிப்பு
x
தினத்தந்தி 28 Feb 2022 2:44 PM IST (Updated: 28 Feb 2022 2:44 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா காரணமாக நிறுத்தப்பட்ட சர்வதேச பயணிகள் விமான சேவை நிறுத்தம் தொடரும் என்று டிஜிசிஏ அறிவித்துள்ளது.

புதுடெல்லி,

கொரோனா தொற்று வைரசின் புதிய திரிபுகள் காரணமாக இந்தியாவில் சர்வதேச விமான போக்குவரத்து கடந்த நவம்பர் இறுதியில் இருந்து நிறுத்தப்பட்டது. 

இந்த நிலையில் மறுஅறிவிப்பு வரும் வரை பயணிகள் விமான சேவை நிறுத்தம் தொடரும் என்று சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் (டிஜிசிஏ) தெரிவித்துள்ளது.

மேலும் இந்த தடைகள் சர்வதேச சரக்கு விமானங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகத்தால் அனுமதிக்கப்பட்ட சிறப்பு விமானங்களுக்கு பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story