செபியின் முதல் பெண் தலைவராக மாதபி புரி புச் நியமனம்..!
இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் புதிய தலைவராக மாதபி புரி புச் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதுடெல்லி,
இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் புதிய தலைவராக மாதபி புரி புச் நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் (செபி) தலைவராக இருக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரி அஜய் தியாகியின் பதவிகாலம் பிப்ரவரி 28 உடன் முடிவடையும் நிலையில் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டது.
இந்நிலையில் மாதவி புரி புச் செபியின் புதிய தலைவராக நியமிக்கபட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இவர் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இந்த பதவியில் இருப்பார். இவர் ஐ.சி.ஐ.சி.ஐ. செக்யூரிட்டியின் முன்னாள் தலைவராக பணியாற்றியுள்ளார். மேலும் கடந்த 2017 மற்றும் 2021 க்கு இடையில் செபியில் முழு நேர உறுப்பினராக பணியாற்றியுள்ளார்.
இவர் செபியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள முதல் பெண் என்பது குறிப்பிடதக்கது.
Related Tags :
Next Story