மனைவியை அடித்து கொன்று விட்டு கீழே விழுந்ததாக நாடகமாடிய கணவர் கைது..!


மனைவியை அடித்து கொன்று விட்டு கீழே விழுந்ததாக நாடகமாடிய கணவர் கைது..!
x
தினத்தந்தி 28 Feb 2022 7:40 PM IST (Updated: 28 Feb 2022 7:40 PM IST)
t-max-icont-min-icon

தாராவியில் மனைவியை அடித்து கொலை செய்துவிட்டு கீழே விழுந்ததாக நாடகமாடிய கணவரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

மரணத்தில் சந்தேகம்

மும்பை தாராவி பகுதியை சேர்ந்தவர் ராகுல் ஜெய்ஸ்வால் (வயது27). இவரது மனைவி ரோஷினி (22). கடந்த வாரம் உடலில் காயங்களுடன் மயங்கிய நிலையில் ரோஷினியை, கணவர் ராகுல் ஜெய்ஸ்வால் சயான் ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தார். அப்போது ரோஷினி வீட்டில் தவறி விழுந்துவிட்டதாக டாக்டர்களிடம் கூறினார்.

இந்த நிலையில் இளம்பெண் அங்கு சிகிச்சை பலன் இன்றி சிறிது நேரத்தில் உயிரிழந்தார். பின்னர் பிரேத பரிசோதனையில் இளம்பெண்ணுக்கு உள்காயங்கள் ஏற்பட்டு இருந்தது தெரியவந்தது. எனவே டாக்டர்கள் இளம்பெண்ணின் மரணத்தில் சந்தேகம் அடைந்தனர்.

அடித்து கொலை

இதையடுத்து போலீசார் இளம் பெண்ணின் கணவர் ராகுல் ஜெய்ஸ்வாலிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் மனைவியை அடித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் அவரை கொலை வழக்கில் கைது செய்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், " ரோஷினி, கணவருக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்டதாகவும் இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்து உள்ளது. " என்றார்.

Next Story