உக்ரைனில் இருந்து தப்பிக்க 28 மணி நேரம் காரில் பயணித்த இந்திய மாணவிகள்
உக்ரைனில் வழிநெடுகிலும் குண்டுமழை பொழிந்ததாக அதிர்ச்சி தகவல் தெரிவித்தனர்.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவை சேர்ந்தவர் சுனேகா. இவர் உக்ரைன் நாட்டில் படித்து வருகிறார். இந்த நிலையில் உக்ரைன் மீது ரஷியா போர் தொடுக்க ஆரம்பித்ததும் சுனேகா, அவரது தோழி ரச்சனா ஆகியோர் ஒரு தோழியின் வீட்டில் தங்கி உள்ளனர்.
இந்த நிலையில் அங்கு அவர்களுக்கு உணவு, குடிநீர் எதுவும் கிடைக்காத காரணத்தால் சுனேகாவும், ரச்சனாவும் ருமேனியா தலைநகர் புகாரெஸ்ட்டுக்கு செல்ல முடிவு செய்தனர். இதையடுத்து ஒரு காரை வாடகைக்கு அமர்த்திய சுனேகாவும், ரச்சனாவும் அந்த காரில் உக்ரைன் தலைநகர் கீவ்வில் இருந்து புகாரெஸ்ட்டுக்கு புறப்பட்டனர். அவர்கள் தற்போது ருமேனியா எல்லையில் உள்ள ஸ்லோவக்கியன் என்ற இடத்தில் ஓட்டலில் தங்கி உள்ளனர்.
இதுகுறித்து சுனேகா வெளியிட்டு உள்ள வீடியோவில், உக்ரைனில் தற்போது நிலைமை மோசமாக உள்ளது. இதனால் அங்கிருந்து தப்பித்து புகாரெஸ்ட் நோக்கி காரில் சென்று கொண்டு இருக்கிறோம். இதுவரை 28 மணி நேரம் தொடர்ந்து பயணித்து உள்ளோம். நாங்கள் வரும் வழிநெடுகிலும் எல்லாம் குண்டு மழை பொழிந்தது. உயிரை கையில் பிடித்து கொண்டு இங்கு வந்து உள்ளோம். விரைவில் ருமேனியாவுக்கு சென்று விடுவோம். அங்கு உள்ள இந்திய தூதரகம் உதவியுடன் விரைவில் இந்தியா திரும்பி விடுவோம் என்று நம்பிக்கை உள்ளது என கூறியுள்ளார்.
Related Tags :
Next Story