கொலை குற்றவாளிக்கு 14 வருட சிறைதண்டனைக்கு பின் ஜாமீன் வழங்கிய சுப்ரீம் கோர்ட்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 2 March 2022 3:34 AM IST (Updated: 2 March 2022 4:11 AM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் கொலை குற்றத்திற்காக 14 வருடங்கள் சிறையில் இருந்தவருக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமீன் வழங்கியுள்ளது.

டெல்லி,

உத்தரபிரதேச மாநிலம்  பாக்பத் மாவட்டத்தில் கடந்த ஜனவரி 14, 2008 அன்று ரிது பால் என்பவர் ஒருவரை கொலை செய்ததற்காக ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. பாக்பத் மாவட்ட நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கியது.

நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ரிது பால், அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். கடந்த 2012 முதல் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனுதாரரின் ஜாமீன் மனு பரிசீலிக்கப்படாமல் நிலுவையில் இருந்தது. 

இந்த நிலையில், அவரின் ஜாமீன் மனு நிலுவையில் இருந்ததையும், ஏற்கனவே அவர் 14 ஆண்டுகள் 3 மாத காவலில் இருந்ததையும் கருத்தில் கொண்டு குற்றவாளிக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமீன் வழங்கியுள்ளது.

இந்திய தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வானது ரிது பாலுக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியுள்ளது.


Next Story