கேரளா: சரக்கு லாரி மீது பைக் மோதியதில் எஞ்சினியரிங் கல்லூரி மாணவர் பலி
ஆற்றிங்கல் அருகே நடந்த கோர விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற எஞ்சினியரிங் கல்லூரி மாணவர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.
கேரளா,
திருவனந்தபுரம், அயிழம் என்ற இடத்தை சேர்ந்தவர் அப்பு (21). இவர் கழக்கூட்டத்தில் உள்ள ஒரு தனியார் எஞ்சினியரிங் கல்லூரியில் படித்து வந்தார். நேற்று அப்பு தனது நண்பர் ஆலம்கோட்டை சேர்ந்த ஆலின் (21)னுடன் பைக்கில் திருவனந்தபுரம் நோக்கி வந்து கொண்டு இருந்தார்.
இந்நிலையில் காலை 8.30 மணியளவில், ஆற்றிங்கல், கோரணி 18-ம் மைல் அருகே முன்னால் சென்று கொண்டு இருந்த ஒரு சரக்கு லாரியை, மோட்டார் சைக்கிளில் வேகமாக முந்த முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த வாகனத்தின் மீது தட்டிய அந்த பைக், நிலை தடுமாறி திருவனந்தபுரம் நோக்கி வந்து கொண்டு இருந்த அதே சரக்குலாரியின் முன் பகுதியில் சிக்கி கொண்டது.
இந்த விபத்தை தொடந்து அந்த மோட்டார் சைக்கில் சில அடி தூரம் இழுத்து செல்லப்பட்டது. அப்போது பைக்கில் ஏற்பட்ட உராய்வினால் பைக்கில் தீ பற்றிக்கொண்டது. இதை தொடர்ந்து லாரியின் முன் பகுதியும் சேர்ந்து எரிய தொடங்கியது. இந்த விபத்தில் அப்பு அதே இடத்தில் உடல் கருகி உயிர் இழந்தார். படுகாயம் அடைந்த ஆலின் திருவனந்தபுரம் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்து குறித்து அறிந்த ஆற்றிங்கல் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த விபத்து காரணமாக அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்தை தொடர்ந்து தப்பி ஓடிய லாரி டிரைவர் ஆற்றிங்கல் போலீசாரின் பாதுகாப்பில் உள்ளார். விபத்து குறித்து ஆற்றிங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story