குறைந்த விலையில் ஐபோன்கள் தருவதாக கூறி நூதன மோசடி - ரூ.1.76 கோடி இழந்த நபர்..!


குறைந்த விலையில் ஐபோன்கள் தருவதாக கூறி நூதன மோசடி - ரூ.1.76 கோடி இழந்த நபர்..!
x
தினத்தந்தி 3 March 2022 2:37 AM IST (Updated: 3 March 2022 2:37 AM IST)
t-max-icont-min-icon

குறைந்த விலையில் ஐபோன்கள் வாங்கி தருவதாக கூறி நூதன மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.

ஜெய்பூர்,

குறைந்த விலையில் ஐபோன்கள் வாங்கி தருவதாக கூறி ரூ.1.76 கோடி வரை மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் கர்நாடக மாநிலம் பெல்காமைச் சேர்ந்த அக்‌ஷய் பட்டேல். அவர்மீது ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரைச் சேர்ந்த கவுதம் புகாரளித்துள்ளார். முன்னதாக, கடந்த ஆண்டு ஜூலை மாதம் பெங்களூருவில் வைத்து அக்‌ஷயை கவுதம் சந்தித்துள்ளார். 

அவரிடம் அக்‌ஷய், தான் ஆப்பிள் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜீனியராக பணிபுரிவதாக கூறியுள்ளார். ஐபோன்கள் மற்றும் அதன் உதிரி பாகங்கள் அனைத்தையும் விற்பனை விலையை விட 30 முதல் 40 சதவீதம் வரை குறைந்த விலையில் வாங்கி தருவதாக கூறி அவரிடம் பணம் பெற்றுள்ளார்.

இதுவரை ரூ.1.76 கோடி வரை பெற்றுள்ளார். இதுவரை எந்த பொருளையும் வாங்கி கொடுக்காததால் சந்தேகமடைந்த கவுதம் போலீசில் புகாரளித்துள்ளார். புகாரின் பேரில் அக்‌ஷயை தேடிய உதய்பூர் போலீசார் பெங்களூருவில் வைத்து அவரை கைது செய்தனர். அங்கிருந்து உதய்பூருக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story