கர்நாடகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 63 மத கலவர வழக்குகள் பதிவு


கர்நாடகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 63 மத கலவர வழக்குகள் பதிவு
x
தினத்தந்தி 3 March 2022 3:02 AM IST (Updated: 3 March 2022 3:02 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 63 மத கலவர வழக்குகள் பதிவாகி இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் நடந்த மத கலவரம் குறித்து கர்நாடக உள்துறை ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

“கர்நாடகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந் தேதி முதல் இந்த ஆண்டு (2022) பிப்ரவரி 15-ந் தேதி வரை 3 வாரங்களுக்கு ஒரு மத கலவரம் நடந்து உள்ளது. இந்த காலகட்டத்தில் 63 மத கலவர வழக்குகள் பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக சிவமொக்காவில் 12 மத கலவர வழக்குகளும், வடகர்நாடக மாவட்டங்களான பாகல்கோட்டை, ஹாவேரியில் தலா 10, கடலோர மாவட்டமான தட்சிண கன்னடாவில் 11, துமகூருவில் 6, கதக்கில் 5, கலபுரகியில் 4, பெலகாவி, பல்லாரியில் தலா 2, விஜயாப்புராவில் ஒரு மத கலவர வழக்குகளும் பதிவாகி உள்ளது.

2021-ம் ஆண்டு மத கலவரம் தொடர்பாக அதிகபட்சமாக 23 வழக்குகள் பதிவாகி உள்ளது. இதில் 21 வழக்குகளின் விசாரணை நிலுவையில் உள்ளது. 2 வழக்குகள் முடிக்கப்பட்டு உள்ளது. 2 வழக்குகளில் ‘பி’ அறிக்கையும், ஒரு வழக்கில் ‘சி’ அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. 2 வழக்குகளுக்கு குற்றப்பத்திரிகை விரைவில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story