ரஷிய-உக்ரைன் போர்: எல்.ஐ.சி. பங்கு வெளியீடு தள்ளிப்போகிறது?


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 3 March 2022 6:59 AM IST (Updated: 3 March 2022 6:59 AM IST)
t-max-icont-min-icon

ரஷிய-உக்ரைன் போர் எதிரொலியாக, எல்.ஐ.சி.யின் பங்கு வெளியீடு தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

புதுடெல்லி, 

ஆயுள் காப்பீட்டு கழகத்தின் (எல்.ஐ.சி.) 5 சதவீத பங்குகளை விற்று ரூ.63 ஆயிரம் கோடி திரட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி இந்த மாதத்தில் பொது பங்குகள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தற்போது ரஷிய-உக்ரைன் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பொது பங்கு வெளியீடு தள்ளிப்போகலாம் என்று கருதப்படுகிறது.

‘சூழ்நிலையை மதிப்பிட்டு எல்.ஐ.சி. பொது பங்கு வெளியீடு குறித்து முடிவு செய்யப்படும்’ என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனும் அதே கருத்தை பிரதிபலித்துள்ளார்.

Next Story