'மேக் இன் இந்தியா திட்டம்' உலகுக்கு நமது திறனை காட்டுவதற்கான வாய்ப்பு : பிரதமர் மோடி


மேக் இன் இந்தியா திட்டம் உலகுக்கு நமது திறனை காட்டுவதற்கான வாய்ப்பு : பிரதமர் மோடி
x

தொழில்துறை மேம்பாடு மற்றும் சர்வதேச வர்த்தக துறைக்கான ஒதுக்கீடு குறித்த இணைய கருத்தரங்கில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக உரையாற்றினார்

புதுடெல்லி, 

மத்திய பட்ஜெட்டில் தொழில்துறை மேம்பாடு மற்றும் சர்வதேச வர்த்தக துறைக்கான ஒதுக்கீடு குறித்த இணைய கருத்தரங்கில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக உரையாற்றினார் 

அப்போது அவர் கூறியதவாது ;

இந்தியாவின் மொத்த ஜிடிபியில் உற்பத்தி துறை 15 சதவீதம் ,பங்கு வகிக்கிறது மேக் இன் இந்தியா திட்டம் உலகுக்கு நமது திறனை காட்டுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது .நாம் 'மேக் இன் இந்தியா' என்பதில் கவனம் செலுத்த வேண்டும்,

நிலையான மற்றும் தரமான பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும்.  'மேக் இன் இந்தியா' என்பது காலத்தின் தேவை. நாம் பெரிதாக சிந்திக்க வேண்டும். உள்நாட்டு உற்பத்தியாளர்கள் உலகளாவிய தரத்தை பராமரிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Next Story