கொரோனா எண்ணிக்கை உயராமல் நாட்டை காத்தது தடுப்பூசி; நிதிஆயோக் சுகாதார உறுப்பினர்
நாட்டில் கொரோனா எண்ணிக்கை உயராமல் தடுப்பூசி பாதுகாத்தது என நிதிஆயோக் சுகாதார உறுப்பினர் வி.கே. பால் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா முதல் மற்றும் 2வது அலையில் அதிகளவில் பாதிப்புகளை நாடு சந்தித்தது. அவற்றில் இருந்து மீண்டு வருவதற்குள் 3வது அலை நடப்பு ஆண்டில் பாதிப்புகளை ஏற்படுத்தியது. ஒமைக்ரான் பரவலால் இந்த பாதிப்புகள் ஏற்பட்டன. தொடர்ந்து 4வது அலைக்கான சாத்தியம் பற்றியும் நிபுணர்கள் கணிப்பு வெளியிட்டு உள்ளனர்.
கொரோனா பாதிப்புகளில் இருந்து மக்களை மீட்க தடுப்பூசி போடும் பணிகளை அரசு தீவிரப்படுத்தி உள்ளது. கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி முதல் அவசரகால தேவைக்காக தடுப்பூசி போடுவதற்கு அரசு அனுமதி வழங்கி பணிகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளன.
இந்த நிலையில், நிதிஆயோக் சுகாதார உறுப்பினர் வி.கே. பால் இன்று கூறும்போது, தடுப்பூசிகள் மற்றும் பரவலான தடுப்பூசி போடும் பணிகள் ஆகியவை நூற்றுக்கணக்கான உயிர்களை பாதுகாப்பதில் மிக முக்கிய பங்கு வகித்துள்ளது சான்றாக உள்ளது.
கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்வதில் இருந்து, நாட்டை தடுப்பூசி பாதுகாத்துள்ளது என்று கூறியுள்ளார்.
Related Tags :
Next Story