உத்தரபிரதேசத்தில் 6ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு!!
உத்தரபிரதேசத்தில் 57 தொகுதிகளுக்கு இன்று 6ம் கட்ட தேர்தல் நடைபெற்றது.
லக்னோ,
உத்தரபிரதேசத்தில் 403 சட்டசபை தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடந்து வருகிறது. ஏற்கெனவே 5 கட்டங்களாக வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், 57 தொகுதிகளுக்கு இன்று 6ம் கட்ட தேர்தல் நடைபெற்றது. அம்பேத்கர்நகர், பல்ராம்பூர், சித்தார்த்நகர், பாஸ்தி, சந்த் கபிர் நகர், மகராஜ்கஞ்ச், கோரக்பூர், குஷிநகர், தியோரியா மற்றும் பல்லியா மாவட்டங்களில் இந்த தொகுதிகள் அடங்கியுள்ளன.
இந்நிலையில், காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதும் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் பிற்பகலில் மந்தமானது. தொடர்ந்து வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. இறுதியாக, இன்று மாலை 5 மணி நிலவரப்படி அங்கு 53.31 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன என்று மாநில தேர்தல் அதிகாரி அஜய் குமார் சுக்லா கூறினார்.
இறுதிகட்ட (7ம் கட்ட) தேர்தல் வாக்குப்பதிவு மார்ச் 7ம் தேதியன்று நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மார்ச் 10ம் தேதியன்று நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story