பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றி - இந்திய கடற்படை தகவல்


பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றி - இந்திய கடற்படை தகவல்
x
தினத்தந்தி 5 March 2022 9:12 PM IST (Updated: 5 March 2022 9:12 PM IST)
t-max-icont-min-icon

அதிநவீன பிரம்மோஸ் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவின் அதிநவீன பிரம்மோஸ் ஏவுகணையை இந்திய கடற்படை அவ்வபோது சோதனை செய்து வருகிறது. அந்த வகையில் நாட்டின் ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கழகம் சார்பில் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை இந்திய கடற்படையால் இன்று விண்ணில் ஏவப்பட்டது.

இந்த ஏவுகணை நீண்ட தூரப் பாதையைக் கடந்து துல்லியமான இலக்கை வெற்றிகரமாக அடைந்தது. ஆத்மா நிர்பார் பாரத் மற்றும் மேக் இன் இந்தியா முயற்சியில் இந்திய கடற்படையின் பங்களிப்புடன் ஏவுகணை சோதனை வலுப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. 

Next Story