உத்தரபிரதேசத்தில் இருந்து டெல்லி சென்ற ரெயிலில் தீவிபத்து


உத்தரபிரதேசத்தில் இருந்து டெல்லி சென்ற ரெயிலில் தீவிபத்து
x
தினத்தந்தி 6 March 2022 3:18 AM IST (Updated: 6 March 2022 3:18 AM IST)
t-max-icont-min-icon

சஹாரன்பூர்-டெல்லி பயணிகள் ரயில் இன்ஜின் மற்றும் 2 பெட்டிகளில் திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

மீரட், 

உத்தரபிரதேசத்தின் சகாரன்பூரில் இருந்து டெல்லிக்கு ஒரு பயணிகள் ரெயில் சென்றது. அம்மாநிலத்தின் தாராலா ரெயில் நிலையத்துக்கு நேற்று காலை 7 மணியளவில் அந்த ரெயில் வந்தது. அப்போது அதன் 2 பெட்டிகளில் இருந்து புகை வருவதை பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் கவனித்தனர். உடனடியாக ரெயில்வே அதிகாரிகளை அவர்கள் உஷார்ப்படுத்தினர். 2 பெட்டிகளிலும் இருந்து பயணிகள் அவசரமாக கீழே இறக்கப்பட்டனர்.

காற்று வேகமாக வீசிய நிலையில் தீப்பற்றி, மளமளவென்று எரியத் தொடங்கியது.

உடனடியாக விரைந்து வந்த தீயணைப்பு படையினர், 2 பெட்டிகளிலும் தீயை அணைத்தனர். அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாரும் காயம் அடையவில்லை.

தீப்பற்றிய பெட்டிகளை ரெயில்வே ஊழியர்கள் கழற்றிவிட்ட நிலையில், மற்ற பெட்டிகளில் தீ பரவாமல் தடுக்கும் வகையில் அவற்றை பயணிகளே ஒன்று சேர்ந்து தள்ளி நகர்த்தினர்.

மின் கசிவால் இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விபத்தால் மீரட்-சகாரன்பூர் வழித்தடத்தில் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story