இந்தியாவில் வெகுவாக குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு..!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,476 பேர் புதிதாக கொரோனாவால் பாதிப்பு.
புதுடெல்லி,
இந்தியாவில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. நேற்று 5,921 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,476 ஆயிரமாக குறைந்தது.
இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியே 29 லட்சத்து 62 ஆயிரத்து 953 ஆக உயர்ந்தது.
தொடர்ச்சியாக 28 நாட்களாக 1 லட்சத்துக்கும் கீழ் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது.
சிகிச்சை பெறுவோர்
கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்து வருகிறது.இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 59 ஆயிரத்து 442 ஆக குறைந்தது.
நேற்று ஒரு நாளில் கொரோனா தொற்றில் இருந்து 9 ஆயிரத்து 754 பேர் குணம் அடைந்துள்ளனர்.இதுவரையில் இந்த தொற்றில் இருந்து குணம் அடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 23 லட்சத்து 88 ஆயிரத்து 475 ஆக உயர்ந்துள்ளது.
உயிரிழப்பு
கொரோனாவால் ஏற்படுகிற உயிரிழப்பு தொடர்ந்து சரிகிறது. நேற்று 289 பேர் இந்த தொற்றால் உயிரிழந்த நிலையில், இன்று இந்த எண்ணிக்கை 158 ஆக குறைந்தது. இதுவரை இந்த தொற்றால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 15 ஆயிரத்து 36 ஆக அதிகரித்துள்ளது.
தடுப்பூசி
நாட்டில் மொத்தம் இதுவரை 1,78,83,79,249 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 26 லட்சத்து 19 ஆயிரத்து 778 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டது.
Related Tags :
Next Story