கேரளாவில் மேலும் 1,408- பேருக்கு கொரோனா


(Photo | PTI)
x
(Photo | PTI)
தினத்தந்தி 6 March 2022 7:13 PM IST (Updated: 6 March 2022 7:13 PM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,408- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம், 

கேரளாவில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் 1,408- பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து மேலும் 3,033- பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனா தொற்று பாதிப்பால் மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.  கொரோனா தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 14,153- ஆக உள்ளது. 

தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 5.56 சதவிகிதமாக உள்ளது. கொரோனா தொற்று பாதிப்பைக் கண்டறிய கடந்த 24 மணி நேரத்தில் 25,325- மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. கேரளாவில் மொத்தம் உள்ள 14 மாவட்டங்களில் 5 மாவட்டங்களில் மட்டுமே 100-க்கும் மேல் கொரோனா பதிவாகியுள்ளது. 

Next Story