பாலஸ்தீனியத்திற்கான இந்திய தூதர் திடீர் மரணம்.!
அவரது மரணத்திற்கான காரணம் என்ன என்பது இதுவரை தெரியவில்லை.
பாலஸ்தீனியம்,
பாலஸ்தீனியத்திற்கான இந்திய தூதர் முகுல் ஆர்யா திடீரென உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரமல்லா நகரில் உள்ள இந்திய தூதரக அலுவலகத்தில் பணியில் இருந்த போது அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது மரணத்திற்கான காரணம் என்ன என்பது இதுவரை தெரியவில்லை.
இந்திய தூதர் மரணம் அடைந்தது தொடர்பாக பாலஸ்தீனிய அதிகாரிகள் தொடந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முகுல் ஆர்யா மரணமடைந்த செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியடைந்ததாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். திறமையான அதிகாரியை இந்தியா இழந்துவிட்டதாக அவர் தெரிவித்தார். 2008 பிரிவு இந்திய அயலக பணி அதிகாரியான ஆர்யா, ஆப்கானிஸ்தான், ரஷியா ஆகிய நாடுகளிலும் பணியாற்றியுள்ளார்.
இந்திய தூதர் முகுல் ஆர்யாவின் மறைவுக்கு பாலஸ்தீனிய அரசும் இரங்கல் தெரிவித்துள்ளது. அவரது உடலை இந்தியாவிற்கு அனுப்பிவைப்பதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளதாக பாலஸ்தீனிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story